தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மதுரை, சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதற்கான போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படவுள்ளன. அதற்கான கட்டண விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கரிய மங்கலம் ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண விவரங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும்,
நாகம்பட்டி மற்றும் கரியமங்கலம் சுங்கச்சாவடிகளில் ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை!
தியேட்டருல ஜாலி… ஆபிஸே காலி : அப்டேட் குமாரு
கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!
ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?