முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்று (ஏப்ரல் 3) இலங்கைக்கு சென்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இதனிடையே, தனது மகளுடன் லண்டனில் வசிக்க போவதாகவும், அதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக்கோரியும் முருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர்கள் மூவரும் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, திருச்சி முகாமில் இருந்து காவல்துறையின் பாதுகாப்புடன் மூவரும் நேற்று (ஏப்ரல் 2) இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 3) காலை 10 மணிக்கு கொழும்பு செல்லும் விமானம் மூலம் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை சென்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!
கள்ளழகர் திருவிழா : நீர் பீய்ச்சி அடிக்க தடை விதித்த நீதிமன்றம்!