மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (நவம்பர் 24) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களுக்கு 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக எஸ்.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சீனாவில் பரவும் புதிய தொற்று… மருத்துவனையில் குவியும் குழந்தைகள்: WHO கண்டனம்!