பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழகத்தில் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.  மேலும், இலவச வேட்டி- சேலைகளும் ரேஷனில் வழங்கப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 70 சதவிகித மக்கள் ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் வாங்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், “விடுமுறை முடிந்து வந்தாலும் ரேஷனில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளோம். எனவே, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: எம்ஜிஆர் பிறந்தநாள் முதல் ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் வரை! 

கிச்சன் கீர்த்தனா: டோக்ளா

கடற்கரையில் திருவள்ளுவர் மணற்சிற்பம்: ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

முதல்வர் கோரிக்கை: யுஜிசி நெட் தேர்வு மாற்று தேதிகள் அறிவிப்பு!

பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றத்தைப் போக்க மவுத் வாஷ், பேஸ்ட்… தீர்வாகாது!

ஹெல்த் டிப்ஸ்: நலமாக வாழ இந்த நான்கு விஷயங்கள் போதும்!

டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel