thoothukudi firing madras high court case hearing

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 17) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. thoothukudi firing case hearing

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாம் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னதாக இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு, மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்பி கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியர் சேகர் உள்ளிட்ட 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா? ஓய்வு பெற்றுவிட்டார்களா? என்று தமிழக அரசு முறையாக பதில் மனுவில் குறிப்பிடவில்லை. thoothukudi firing case hearing

இதுதொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி

விவசாயிகள் மீது குண்டாஸ்: பாஜக ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா-பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *