தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்து கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளுள் ஒன்று மக்ரூன்.
இந்த முந்திரி ஸ்வீட்டுக்கு பிரபலமான ஊர், தூத்துக்குடி. வெள்ளை நிறத்திலிருக்கும் இந்த இனிப்பை வாயில் போட்டாலே கரைந்து விடும் என்பதால் இதை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவர். இப்படிப்பட்ட மக்ரூனை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
(ஒரு கிலோ மக்ரூன் தயாரிக்க)
முட்டை – 15
சர்க்கரை – 450 கிராம்
முந்திரிப்பருப்பு – 500 கிராம்
மைதா மாவு மற்றும் வனஸ்பதி- தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முந்திரியை மிக்ஸியில் போட்டுத் திரித்து, சல்லடையில் சலித்து, பவுடரைத் தனியாகவும், குருணையைத் தனியாகவும் பிரித்து வைக்கவும்.
முட்டைகளை உடைத்து, வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரையைச் சேர்த்து அடித்து… இறுகி வரும்போது, முந்திரி பவுடரைப் போட்டுக் கலக்கவும்.
நன்கு கலக்கியதும், முந்திரி குருணையைப் போட்டு மெதுவாகக் கலக்கவும். ஒரு டிரேயில், வனஸ்பதியைத் தடவி, அதன் மேல் கொஞ்சம் மைதா மாவைத் தூவவும் (கலவை ட்ரேயில் ஒட்டாமல் இருப்பதற்காக). முட்டை, முந்திரிக் கலவையை ‘பட்டர் பேப்பர் கோனி’ல் இட்டு, டிரேயில் வேண்டிய அளவில் பிழியவும்.
பிறகு, அவன் அல்லது ஃபர்னஸ் அடுப்புக்குள் வைத்து, 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒன்றரை மணி நேரம் வேக வைத்து எடுத்தால், சுவையான மக்ரூன் ரெடி.
கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் கட்லெட்