நான்காவது நாளாக தங்கம், வெள்ளி விலை குறைந்து விற்பனையாகிறது.
2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக அன்றைய தினமே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் 4ஆவது நாளாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இன்று (ஜூலை 26) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 குறைந்து சவரன் ரூ 51,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415 க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ.89க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ 89,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் வெள்ளி விலை குறைந்து வருவதால் நகை பிரியர்கள் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
share market : வார இறுதி நாள்… உயர்வுடன் தொடங்கிய பங்கு சந்தை!
ராயன் முதல் சட்னி சாம்பார் வரை… இன்றைய ஓடிடி & தியேட்டர் ரிலீஸ்!