உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.
இதன் நிறைவாக ஒவ்வொரு ஆண்டும் வரும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இது நோன்பு வெற்றிகரமாக முடிவடைகிறது என்பதையும், இஸ்லாமிய மாத ஷவ்வால் தொடங்குகிறது என்பதையும் குறிக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் எப்போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்ற கேள்வி எழுந்தது.
வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் தேதியானது ஒவ்வொரு ஆண்டும் சந்திரனை மையமாக கொண்டு புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாறுபடும்.
அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில், ரம்ஜான் பண்டிகை தேதி ஏப்ரல் 10ஆம் தேதியா அல்லது ஏப்ரல் 11ஆம் தேதியா என்பதில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29ம் தேதி அதாவது ஆங்கில மாதம் 09-04-2024 தேதி (இன்று) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஆங்கில மாதம் 11-04-2024 தேதி (வியாழக்கிழமை) அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11-04-2024 தேதி கொண்டாடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முடிவுக்கு வந்த மோதல் : மீண்டும் ஒன்று சேர்ந்த சூரி – விஷ்ணு விஷால்
பனகல் பார்க் டூ தேனாம்பேட்டை சிக்னல் :மோடி ரோடுஷோ!
Comments are closed.