தங்கத்தின் விலை இன்று (ஜூலை 25) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையில் தங்கம் விலை நேற்று (ஜூலை 24) ஒரேநாளில் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,490க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.65குறைந்து ரூ.7,015க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் நேற்று ஒரு கிராம் ஒரு கிராம் ரூ. 0.50 காசுகள் குறைந்து ரூ.92க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜூலை 25) ஒரு கிராம் ரூ. 3 குறைந்து ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 குறைந்து ரூ.89-89க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சரிவுடன் தொடங்கிய வர்த்தகம்… இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் எவை?
களைகட்டும் பாரீஸ் ஒலிம்பிக் : ஆபத்தில் இஸ்ரேலிய வீரர்கள்!