திருவண்ணாமலையில் இன்று தைப்பூச பௌர்ணமி கிரிவலம்!

தமிழகம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமான திருவண்ணாமலையில் தைப்பூச பௌர்ணமி கிரிவலம் போக விரும்பும் பக்தர்கள் இன்று (பிப்ரவரி 4) இரவு 10.41 மணிக்கு தொடங்கி நாளை 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.48 மணி வரை பௌர்ணமி திதியில் கிரிவலம் செல்லலாம்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்தாலும், திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால்,

இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

இந்த நிலையில் தை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த மாதத்திற்கான பௌர்ணமி இன்று இரவு 10.41 மணிக்கு தொடங்கி நாளை 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

திருவண்ணாமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

சக்தி

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்!

ஈபிஎஸ் ஓபிஎஸ் -கட்டாய கல்யாணம்: உச்ச நீதிமன்ற கருத்து பற்றி செம்மலை சீற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *