கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்வைக் காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவர்.
கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்திகை தீபத் திருவிழா எளிமையாக நடந்தது.
அத்துடன் இந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பொளர்ணமியும் வர உள்ளது. இந்த ஆண்டு, 2 சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இப்பேருந்துகளை, போக்குவரத்துத் துறை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் வருகையை அடுத்து, பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் இருக்கிறது.
இந்த சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஆரணி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்பட இருக்கின்றன.
ஜெ.பிரகாஷ்
ஆதியோகி டிபி: ஷாரிக் வைக்க இதுதான் காரணம் – சத்குரு
திமுக, பாஜகவைத் தொடர்ந்து விசிக: திருமாவிடம் கொதித்த பெண் நிர்வாகி!