திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நள்ளிரவில் திருவண்ணாமலையில் உள்ள 4 ஏடிஎம்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
கொள்ளையடித்தது மட்டுமின்றி ஏடிஎம் மெஷின்களை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வண்டி எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஹரியானா சென்ற தனிப்படை போலீசார் நேற்று (பிப்ரவரி 17) இரவு கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் கைது செய்தனர். இன்று (பிப்ரவரி 18) அதிகாலை திருவண்ணாமலை அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி கொள்ளை கும்பலின் தலைவர் முகமது ஆரிஃப் மற்றும் கூட்டாளி ஆசாத் ஆகிய இருவரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
மோனிஷா
அன்புஜோதி ஆசிரம வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!