இன்று (டிசம்பர் 20) சனிப்பெயர்ச்சி என்பதால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் இரவு முழுவதும் நடை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. sanivara bhagavan temple Sanipeyarchi
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறில் இருக்கும் சனீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். இதனை முன்னிட்டு திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு சார்வரி வருடம் டிசம்பர் 27ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 5.20 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இதற்கான கொடியேற்று விழா கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருநள்ளாறில் நடைபெற்றது. இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்து வருகின்றனர்.
எனவே இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விடிய விடிய இரவு முழுவதும் கோயில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்குக் குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பேருந்து உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இலவச தரிசனம், விஐபி தரிசன வரிசைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நளன் குளம் வாயிலிருந்து இலவச தரிசனத்துக்கான வரிசை தொடங்குகிறது.
யானை மண்டபம் வழியாக விஐபி தரிசனமும், ராஜகோபுரம் வழியாக 1000 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களும், தெற்கு வீதி வழியாக 600 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களும்,
மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர்வாயில் வழியாக 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களும் செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நளன் குளத்தில் குளிக்கவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL2024: பிரீத்தி ஜிந்தாவுக்கே விபூதி அடித்த சென்னை கிங்ஸ்… ஏலத்தில் நடந்த தரமான சம்பவம்!
பொன்முடி தீர்ப்பு: முதலமைச்சர் ரியாக்ஷன் என்ன?
sanivara bhagavan temple Sanipeyarchi