விருதுநகரில் நடைபெற்ற இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து வந்த மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். thirukkural conclave held in virudhunagar
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 970 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.
தங்கம் தென்னரசு பேசும்போது, “திருக்குறள் என்பது இலக்கிய நூல் மட்டுமல்ல, உலகப் பொதுமறை நூலாகும். அண்மையில் முதல்வர் ஸ்டாலின் குமரி முனையில் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடினார். அந்த வெள்ளி விழா நிகழ்ச்சியோடு திருக்குறள் மாநாடும் இணைவது மிகச்சிறந்த ஒன்றாகும்” என்று தெரிவித்தார். thirukkural conclave held virudhunagar

அன்பில் மகேஷ், “தமிழ் மொழியையும் திருக்குறளையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. அதற்கு தீராக்காதல் திருக்குறள் போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமாகும்” என்றார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் உள்ளிட்டோரும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் சிறப்புரையாற்றினர்.
இரண்டாம் நாள் அன்று மாணவர்களுக்கான குறள் விநாடி – வினா போட்டியும், கவிதை, சிறுகதை, பேச்சு போட்டிகளும் நடைபெற்றது. பின்னர், மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. thirukkural conclave held virudhunagar