பொரியல் செய்யாத நேரத்தில் அவசரத்துக்குக் கைகொடுப்பதுடன், வீட்டில் உள்ளவர்களை ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் அளவுக்கு சுவையில் அசத்துபவை வற்றல் வகைகள். சத்தான இந்த தினை – தக்காளி வற்றலும் அப்படிப்பட்டவைகளில் ஒன்று. நீங்களும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
தினை மாவு – 2 கப்
ஜவ்வரிசி மாவு – அரை கப்
தக்காளிச்சாறு – ஒன்றரை கப்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தக்காளிச்சாறு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும். கொதிவரும் போது கலந்து வைத்துள்ள தினைமாவு, ஜவ்வரிசி மாவு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு ஆறவிட்டு சிறிது, சிறிதாக கிள்ளி வைத்து நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் சேர்த்து வைக்கவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.
டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு டோக்கன்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?
திருச்சி இளைஞர் மரணம் எச்3என்2 காரணமா?: கொரோனா காரணமா?