ரத்தச்சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்றவை வராமல் காக்கும் சிறுதானியம் தினை. இரும்புச்சத்து நிறைந்த தினையுடன் புரதச்சத்துகள் நிறைந்த பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த அடை தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். ஆரோக்கியமானது. அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
தினை – 200 கிராம்
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி – தலா 50 கிராம்
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
கேரட் துருவல் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
தினை, பருப்பு வகைகள், பச்சரிசி ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் சோம்பு, உப்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீரைவிட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும். இதனுடன் வெங்காயம், கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சப்பணமிட்டுச் சாப்பிடுவோமா?
கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி