கடும் பனிமூட்டம்… ரயில், விமானங்கள் தாமதம் : தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன?

Published On:

| By christopher

thick fog pradeep john tweet

மார்கழி முடிந்து தை நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக காலையில் வழக்கத்திற்கு மாறாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.hick fog pradeep john tweet

சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (பிப்ரவரி 4) அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பனிமூட்டம் காரணமாக இன்று காலையில் சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை காசிமேடு முதல் நீலாங்கரை வரை கடலே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் படர்ந்திருந்த காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பனிமூட்டம் தொடர்பாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “வட தமிழகப் பகுதிகளில் அடர்ந்த மூடுபனி காணப்படும். நாளை காலையிலும் இதே போன்ற காட்சிகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share