முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளர்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சைபைர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(பிப்ரவரி 7 ) நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் “தற்போதைய நவீன காலத்தில் சைபர்கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள்.
ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறையபேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்” என்றார்.
மேலும், சைபர் பாதுகாப்பு நன்றாக இருக்க வேண்டும் எனில் மாணவர்களாகிய நீங்கள் அதை நன்றாக படிக்கவேண்டும். லிங்க் என்றாலே அது ஆபத்துதான்.
எனவே அதுபற்றிய விழிப்புணர்வு அவசியம். தமிழ்நாட்டில் ’காவல் உதவி’ என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறை செயல்படுத்தி வருகிறது.

அதில் 66வகையான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அதைக்கூட பலரும் இன்னும் டவுன்லோடு செய்யவில்லை.
உங்களுக்கு ஆபத்து என்றால் டச் பண்ணினால் போதும் பக்கத்தில் இருக்கும் காவல்துறையினர் வந்து காப்பாற்றுவார்கள்.
சீனாவில் 5 கோடி ஹேக்கர்கள் இருக்கின்றனர். நமது நாட்டிற்கு அதிக பயிற்சி பெற்ற கணிணி மென்பொறியாளர்கள் வல்லுனர்கள் தேவைப்படுவார்கள்.

இளமையில் நல்ல விஷயங்கள் அனைத்தையும் கற்க வேண்டும். ‘ஹெலன் கெல்லர்’ பல அருமையான புத்தங்கள் எழுதியிருக்கிறர். அவருக்கு கண் தெரியாது, காது கேட்காது, வாய் பேச முடியாது. வாழ்க்கை என்பது மாபெரும் சாகசம். ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள்!