நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. revise electoral rolls Chief Electoral Officer
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவும் கடந்த டிசம்பர் 9 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஜனவரி 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது, “13.61 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 6.02 லட்சம் பெயரை நீக்கியுள்ளோம். முகவரி, பெயர் போன்றவற்றில் 3.23 லட்சம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துள்ளோம்.
புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் செய்த வாக்காளர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையை நாங்கள் அனுப்ப போகிறோம்.
இன்றைய தேதியில் 6,18,90,348 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆண்கள் 3.03 கோடியும், பெண் வாக்காளர்கள் 3.14 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294 வாக்காளர்களும் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம் 4.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதியில் 1,72,140 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதியில் 1,72,624 வாக்காளர்கள் உள்ளனர். வெளிநாட்டில் 3,480 வாக்காளர்கள் உள்ளனர். 4,32,805 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
மேலும் 18-ல் இருந்து 19 வயதிற்குட்பட்ட மொத்தம் 5,62,205 புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். வாக்காளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை எலெக்ஷன் கமிஷன் வெப்சைட்டில் பார்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் இன்னும் வாய்ப்பிருக்கிறது. சம்மந்தப்பட்ட இ ஆர் ஓ ஆபிசரிடம் பார்ம்ஸ் கொடுக்கலாம் அல்லது ஆன்லைனில் www.voters.eci.in என்ற இணையதள முகவரியில் அப்ளை செய்யலாம். நாடாளுமன்ற தேர்தல் நாமினேஷன் செய்வதற்கு 10 நாட்கள் முன்பு வரை திருத்தம் செய்யலாம்.
அதுவரை திருத்தம் செய்யப்பட்டதை இணைந்து ஒரு துணை வாக்காளர் பட்டியலையும் வெளியிட உள்ளோம். அதனால் பெயர் சேர்ப்பதற்கு, நீக்குவதற்கு, திருத்தம் செய்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டையுடன் 69.38 சதவீதம் ஆதாரை இணைத்துள்ளோம். இந்த வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்களை ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமும் கொடுத்துள்ளோம். மேலும் வாக்காளர் பட்டியலின் நகல் வேண்டும் என்றால், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இறுதியாக 1950 என்ற கட்டணமில்லா உதவி எண் இருக்கிறது. வாக்காளர் பட்டியல், தேர்தல் முறைகள் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலும் ஒரு உதவி எண் வைத்துள்ளோம். 1800 4252 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வடிவேலு – பகத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதோ!
ரெண்டு போட்டியில கோலி ஆட மாட்டாரு… அதைப்பத்தி எதுவும் கேட்காதீங்க… பிசிசிஐ கோரிக்கை!
revise electoral rolls Chief Electoral Officer
AmoxilPharm: Amoxil Pharm Store – Amoxil Pharm Store
Ivermectin Pharm Store [url=http://ivermectinpharm.store/#]buy minocycline 100mg for humans[/url] ivermectin 9 mg