பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று (நவம்பர் 9) முழு வேலை நாளாக செயல்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து அன்றைய தினம் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இடையே ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் சங்கம், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, தீபாவளியை கொண்டாட தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்தது.
மேலும் அதனை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நவம்பர் 1ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முழு நேரம் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 நியூஸ் : விருதுநகரில் முதல்வர் கள ஆய்வு முதல் நயன்தாரா ஆவணப்பட ட்ரெய்லர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா பராத்தா