சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான மின் கணக்கீடு எடுக்கப்படாது என்றும், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி அதே மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அவரவர் பயன்பாட்டை பொருத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார வாரிய ஊழியர்கள் வீடு வீடாக வந்து மின் கணக்கீடு செய்வர். அட்டையில் எத்தனை யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு விடுவார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதனை மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இணையதளம் வாயிலாகவோ பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
இந்த நிலையில் கடந்த 3 மற்றும் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி அதே மின் கட்டணத்தை டிசம்பர் மாதமும் செலுத்தி கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!
INDvsSA: 8 ஆண்டு கால பெருமையை தக்க வைக்குமா இந்தியா?
தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய விலை?
ஆட்டத்த பார், ஆட்டாத வால்: ரஜினியின் லால் சலாம் வீடியோ!