பொதுத்தேர்வு தேதி மாற்றமா?: அமைச்சர் விளக்கம்!

Published On:

| By Monisha

general exam date anbil mahesh

general exam date anbil mahesh

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் தொடர்ச்சியாக அதி கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மாணவர்கள் தங்களது புத்தகங்களை வெள்ளத்தில் இழந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வினா விடை புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (டிசம்பர் 20) வெளியிட்டார்.

general exam date anbil mahesh

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் மாதிரி வினா விடை புத்தகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனை மீண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழங்கியுள்ளோம். இந்த புத்தகங்கள் விரைவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

இந்த ஆண்டு ஒரு வரலாறு காணாத மழை. இதில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை பாதிக்கப்பட்ட போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது.

அதனால் தேர்வை நிறுத்தி விட்டு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய பிறகு தான் தேர்வு நடத்தப்பட்டது.

தற்போது தென் மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்கள் மூலமாகத் தான் அந்த பகுதியில் மாணவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள உள்ளோம். ஏற்கனவே புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த உடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

பொதுத்தேர்வை பொறுத்தவரை இதுவரைக்கும் எந்த தேதி மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவித்த அதே தேதிகள் தான்.

அரையாண்டு தேர்வை பொறுத்தவரை 4 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் பள்ளிக் கூடங்களை சுத்தம் செய்த பிறகு உடனே தேர்வுகளை நடத்திட முடிவெடுத்துள்ளோம்.

அந்த மாணவர்களுக்கும் மற்ற மாவட்டத்தில் உள்ள மாணவர்களை போல அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மிமிக்ரி சர்ச்சையில் சாதி சர்ச்சையை கிளப்பிய ஜெகதீப் தங்கார்

Video: ஏலத்திற்கு பின் செம என்ஜாய்… இளம் கேப்டனுடன் ‘கூலாக’ விளையாடிய தோனி!

general exam date anbil mahesh

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share