சென்னை கொரட்டூரில் வீட்டிற்குள் பூட்டி வைத்து மிரட்டிய இளைஞரிடம் இருந்து தீயணைப்புத் துறையினர் குடும்பத்தினரை மீட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் காமேஷ் கண்ணன் (33). ஐ.டி., ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று குடும்ப பிரச்னை மற்றும் பணி காரணமாக இவர் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரை, வீட்டுக்குள் பூட்டி வைத்த காமேஷ் கண்ணன் மிரட்டி, ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கொரட்டூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். மேலும் வீட்டை பூட்டிக் கொண்டதால் உடைத்து திறப்பதற்கு அம்பத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் வந்து ‘டோர் ஓபன்’ வாயிலாக கதவை திறந்து, காமேஷ் கண்ணன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டிற்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
அப்போது அவரை பிடிக்க முயன்றபோது போலீசாரிடமும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். இதனை அடுத்து கொரட்டூர் போலீசார் காமேஷ் கண்ணனை விசாரித்து வருகின்றனர்.
கலை.ரா
சென்னையில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!