பேருந்து ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்கள் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவர் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் சமீபகாலமாக அரசு பேருந்து ஓட்டுநர்களே ஒரு கையில் செல்போன், மறுகையில் ஸ்டியரிங் பிடித்தபிடி பயணிகளின் உயிருக்கு ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை அளித்தது.
இதுதொடர்பாக அவ்வபோது சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது போக்குவரத்துத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
எனினும் அரசு பேருந்தில் ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டே அல்லது அதனை பார்த்தபடியே வாகனம் ஓட்டுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன.
இந்த நிலையில் பேருந்து ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் சாதி குறித்த சட்டப் போராட்டம்! பாகம் 3.
டாப் 10 நியூஸ் : அமித் ஷாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் முதல் கிறிஸ்துமஸ் விழாவில் மோடி வரை!