graduation ceremony held without Ponmudi

அமைச்சர் பொன்முடி இல்லாமல் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!

அரசியல் தமிழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூலை 17) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு தனி அறையில் வைத்து விசாரணை மேற்க்கொண்டனர்.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இன்று (ஜூலை 18 ) அதிகாலை 3.30 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

 

முன்னதாக இந்த நிகழ்வில் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொள்வார் என்ற அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் இன்று அதிகாலை வரை நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணையால் அவர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடிக்கு தனி இருக்கை ஒதுக்கப்படவில்லை.

அதேநேரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஜவான்: நயன்தாரா தோற்றம் வெளியீடு!

தமிழ்நாடு சொல் அல்ல; தமிழரின் உயிர் : முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
3
+1
1
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *