என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் ஏடிஎஸ்பி வெள்ளதுரை மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர் வெள்ளதுரை. 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியை தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு சென்னை அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வீரமணியை என்கவுண்டர் செய்தார். 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் சிறப்பு அதிரடிபடை குழுவில் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு திருப்பாச்சேத்தி அரவங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார் மரண வழக்கு தொடர்பாக வெள்ளதுரை நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
27 ஆண்டுகால காவல் பணியை தொடர்ந்து நேற்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், ஒரு நாளுக்கு முன்னதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டிஜிபி சங்கர் ஜுவால் வெள்ளத்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஓய்வு பெற பரிந்துரைத்த நிலையில், உள்துறை செயலாளர் அமுதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு அவரது சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்துரை மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக, அவரது ஓய்வூதிய பலன்களில் இருந்து ஒரு வழக்கிற்கு 3 லட்சம் ரூபாய், மற்றொரு வழக்கிற்கு 2 லட்சம் ரூபாய் என 5 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து பணி ஓய்வை அனுமதிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!
10.06 கோடி வாக்காளர்கள்… 57 தொகுதிகளில் தேர்தல் … விறுவிறு வாக்குப்பதிவு!