மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பொழிந்தது. அதன்படி, புளியந்தோப்பு , சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தொடர்ந்து 3 வது நாளாக அதிகாலை நேரங்களில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: ராகி கொழுக்கட்டை!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!