சென்னையை குளிர்வித்த மழை!

Published On:

| By Jegadeesh

வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதேபோல், சென்னையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம், குரோம் பேட்டை, வண்டலூர் , பல்லாவரம், தியாகராயர் நகர், எழும்பூர், சேப்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துபட்டு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆசிய கோப்பை… திணறும் இந்தியா: மழையால் ஆட்டம் பாதிப்பு!

ஆசிய கோப்பை… திணறும் இந்தியா: மழையால் ஆட்டம் பாதிப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் : குழுவில் உள்ளவர்கள் யார் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment