ஆடியில் ஏறும் தங்கம் விலை… அதிருப்தியில் பெண்கள்!

Published On:

| By christopher

The price of gold rising in Aadi... Women are dissatisfied!

தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 1) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,420க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51,360க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,430க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ. 2 உயர்ந்து ரூ.91க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) ஒரு கிராம் ரூ.0.70 உயர்ந்து ரூ.91.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.700 உயர்ந்து ரூ.91,700க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. கவனிக்க வேண்டிய பங்குகள் இவைதான்!

ஹமாஸ் இயக்கத் தலைவர் கொலை!