சட்டென உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை!

தமிழகம்

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 6) சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.54,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 4ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,760க்கும், சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.54,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (ஜூலை 5) தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரன் ரூ.54,560க்கு விற்பனையாகிறது.

அந்தவகையில், இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,820க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.54,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,290க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.58,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.97.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.97,700க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூலை 6) வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ரூ.99.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,600 உயர்ந்து ரூ.99,300க்கும் விற்பனையாகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market: வார இறுதி நாள்… பங்குகளின் நிலை என்ன?

‘தங்கலான்’ டிரைலர் அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0