ஆவின் நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. ஐஸ்கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆவின் நெய் விலை நேற்று லிட்டருக்கு 50 உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 580ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோன்று வெண்ணெய் விலையையும் உயர்த்தியுள்ளது ஆவின். சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500கி வெண்ணெய் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம், 52 ரூபாயிலிருந்து, 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வெண்ணெய் சிப்லெட்ஸ் 200 கிராம் 130 ரூபாயிலிருந்து 140 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: பாஜக வளரவில்லை: டெல்லிக்கு அண்ணாமலை அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட்!