அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 11) ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மகாவிஷ்ணுவை அவரது திருப்பூர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரியதை அடுத்து, மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதுகுறித்து நமது மின்னம்பலம்.காம் தளத்தில், டிஜிட்டல் திண்ணை: சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் மகாவிஷ்ணு… கஸ்டடியில் என்ன நடக்கிறது? என விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் பிரஷ் ஜூஸ், வாட்டர் பாட்டில், டீ வாங்கி கொடுத்தனர்.
இரவு டிபன் இட்லி வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து, ”இரவு தூங்குங்கள் நாளைக்கு விசாரணை இருக்கிறது” என்று இன்ஸ்பெக்டர் சேட்டு வெளியில் புறப்பட்டார்.
நீண்ட நேரம் தூங்காமல் அப்படியும் இப்படியும் புரண்டுப் புரண்டுப் படுத்த மகா விஷ்ணு இரவு 11.15 மணிக்கு லேசாக கண் உறங்கினார்.
அப்போதுதான் இன்ஸ்பெக்டர் சேட்டு ’விஷ்ணு… விஷ்ணு…’ என்று எழுப்பியுள்ளார். உடனே ’சார்’ என்றபடி தூக்கக் கலக்கத்துடன் எழுந்தார் விஷ்ணு.
“கிளம்புங்க திருப்பூர் போகணும், உங்களது ஆசிரமம் மற்றும் வீட்டில் சோதனை செய்யனும்” என்றதும், ”சரிங்க சார் வாங்க போகலாம்” என்று போலீஸ் வாகனத்தில் ஏறி விஷ்ணு உட்கார, திருப்பூர் நோக்கி இரவு 11.35 மணிக்கு வேனில் புறப்பட்டனர் போலீசார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
பியூட்டி டிப்ஸ்: உள்ளாடைகளுக்குச் செலவு செய்வதில் அலட்சியம் வேண்டாம்!
ஹெல்த் டிப்ஸ்: தொடர்ச்சியாக எடையைக் குறைக்க முடியவில்லை… அடுத்து என்ன செய்வது?