சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மாநகரட்சிக்குட்பட்ட பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா கோயில் தெருவில் கடந்த 18ஆம் தேதி 6.30 மணியளவில் சுந்தரம் என்ற முதியவர்(வயது 80) ஒருவர் நடந்து சென்றார்.
அப்போது அந்த பகுதியில் நின்ற மாடு திடீரென சுந்தரத்தை முட்டி தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு கடந்த 10 நாட்களாக முதியவர் சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முதியவரின் மரணம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அரும்பாக்கம், ஆவடி என பல இடங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களை மாடு முட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
சென்னை மாநகராட்சியும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அதன்படி கடந்த ஒருவாரத்தில் 70க்கும் மேற்பட்ட மாடுகளும், இதுவரை 3,859 மாடுகளும் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹெல்த் டிப்ஸ்: சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்களால் இவ்வளவு நன்மைகளா?
வந்தே பாரத் ரயில்கள்: வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ஐ.சி.எஃப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
24 ஆண்டுகளுக்கு பிறகு… பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!