விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வாக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
நடிகர் விஜய், ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ செயல்படுத்தி வருகிறார். இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
இந்த நிலையில், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, விஜய் பயிலகம், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசு என இந்த இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.அதோடு, வழக்கறிஞர் அணி, ஐடி விங் அணி என அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அடுத்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரியா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
இந்தியா – பாரத் : பாஜகவின் நோக்கம் என்ன?: வைகோ