75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடு முழுவதும் நடந்து வருகிறது. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் தங்கள் வீடுகளில் தேசிக்கொடியை ஏற்றி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்தி நடிகர் அமீர்கான், கேரள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி, தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தங்கள் வீடுகளில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
அதன்படி நடிகர் விஜய்யும் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றியிருக்கிறார். நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டு வாசலில் மூவர்ணக் கொடி பறக்கிறது.
வீடு மட்டுமல்லாது விஜய்யின் மக்கள் இயக்க அலுவலகத்திலும் கொடியேற்றப்பட்டு இருக்கிறது. மேலும் விஜய்யின் வீடு அமைந்துள்ள சாலை முனையில் இருபக்கமும் உள்ள மரங்கள் மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது.
கலை.ரா
ரஜினியுடன் 23 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரம்யா கிருஷ்ணன்