வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 9) உத்தரவிட்டுள்ளது.
தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவதாஸ் காந்தி வில்சன் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும், இந்த உத்தரவு சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என விளக்கம் அளிக்கப்படவில்லை.
காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தற்போது வரை முறையாக அமல்படுத்தப்படவில்லை.
வாகனங்களில் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும்.
மேலும், பேருந்துகளின் பின்புறமும், இருபுறங்களிலும் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்த விவகாரம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலகக்கோப்பை பதக்கத்திற்கு தகுதியானவர் யார்? : யுவராஜின் ’டக்கர்’ பதில்!
6 மாவட்டங்களில் இன்று கனமழை : வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்!