ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சராசரியாக நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 30 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
பன்னீர் ஒரு கிலோ ரூபாய் 450 -ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் அரை கிலோ விலை ரூபாய் 250 -ல் இருந்து ரூபாய் 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீர் 200 கிராம் ரூபாய் 100-ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பாதாம் மிக்ஸ் 200 கிராம் 100 -ல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று(ஜூலை 25) முதல் அமலுக்கு வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தக்காளி, வெங்காயம், அரிசி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
IRCTC இணையதளம் முடக்கம்: ரயில்வே அட்வைஸ்!
’ஒத்த ஓட்டு முத்தையா’: கவுண்டமணி ரீ என்ட்ரி!
Maliga saman velai yallam kannuku theriyama eritu eruku samnya makkal yallarum kasta padranga itha news podamatringa. paal porutkal veli earuratha news podringa