சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் (அக்டோபர் 18) சோதனை நடத்தி வருகின்றனர்.
செல்போன்கள் முதல் வாஷின் மெஷின்கள் வரை வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது பூர்விகா நிறுவனம்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியா மாநிலங்களிலும் 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில், சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் உள்ள அவரது வீட்டிலும், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள நிறுவனத்தின் பிரதான கிளையிலும் நேற்று காலை 7 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சென்னை பல்லாவரம், பள்ளிக்கரணையிலும் இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. எனினும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நேற்று எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் யுவராஜ் மற்றும் பூர்விகா நிறுவனத்தின் கிளைகளில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் 3 கார்களில் சென்று 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : மாறி மாறி மன்னிப்பு கேட்கும் ஹவுஸ்மேட்ஸ்!
மதி சந்தை முதல் மதி எக்ஸ்பிரஸ் வரை… மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!