சித்தர் என சித்தரித்து பொதுமக்கள் வழிபட்ட மனநலம் பாதித்த முதியவர் தற்பொழுது பூரண குணமடைந்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட முதியவர் நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தந்து வந்தார்.
சித்தரை காண்பதற்காக கரூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது,
இவரைப் பற்றிய தகவல் கேள்விப்பட்டு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தேங்காய், பழம் சாப்பாடு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கொடுத்தனர்.
பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் எதையும் ஏற்க மறுத்து அவற்றை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு, விபூதி பிரசாதம் மட்டும் வழங்கி வந்தார்.
இவரை வைத்து சிலர், சமூக வலைதளம் மூலமாக வதந்தி பரப்பி கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை,
தகரக் கொட்டகை அருகில் உள்ள நாகம்பள்ளி பிரிவு பகுதியில் குடிசை போட்டு அமர வைத்து அவரிடம் ஆசி வாங்க வரும் பொதுமக்களிடமிருந்து உண்டியல் வசூல் செய்து வந்ததாக புகார் எழுந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக சுப்ரமணி மனநலம் பாதிக்கப்பட்டு, உடைகள் அணியாமல் சுற்றி திரிந்தும், யாசகம் எடுத்து உணவருந்தியும், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்து இருந்துள்ளார்.
சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணி மனையில் நேரம் காப்பாளராக பணி செய்து,
அரசு வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
சுப்பிரமணி அவர்களிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.
இதைப்பயன்படுத்தி முதியவர் சுப்பிரமணியனுக்கு சித்தர் கோயில் கட்டவேண்டும் என்று கூறி ஏராளமான பணம் வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் 2.12.2022 அன்று மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் 15 நாள் சிகிச்சைக்கு பின்பு அவர் பூரண குணம் அடைந்த பின்பு தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கலை.ரா
இன்பநிதிக்கும் அழைப்பு விடுக்கும் மூத்த அமைச்சர்கள்!
”குரைக்கும் கடிக்கும் கவர்னர்கள்” பேராசிரியரின் வார்த்தையை நினைவுபடுத்திய கனிமொழி