திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தென் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது.
மேயர் ராதாகிருஷ்ணண் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் கடந்த டிசம்பர் 26 தொடங்கிய இப்போட்டிகள், இன்று (டிசம்பர் 31) நிறைவு பெற்றது.
இந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
மேலும் இவ்விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ. தாயகம் கவி, தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இந்திய ஹாக்கி சங்க பொருளாளர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது, விளையாட்டுத் துறைக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து விதமான போட்டிகளிலும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள ஏதுவாக தேவையான பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்யும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ரேஷன் கடை: நாளை முதல் புதிய முறை அமல்!
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்: உயர்நீதிமன்றம் அதிரடி!