திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் அஜித் (24 ) மாரடைப்பால் இன்று (ஏப்ரல் 5) உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக திருவள்ளூர் பகுதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த அஜித் கடந்த மூன்று மாதமாக உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 5) திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரை குடும்பத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
மருத்துவர்களின் பரிசோதனையின் போதே அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
அண்மையில் கூட ஆவடி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற உடற்பயிற்சியாளர் அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்தி கொண்டதால் 2 சிறுநீரகமும் செயல் இழந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்