”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 20) தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆளுநர் எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பலர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இது சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விசயமாகும்”என ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”கள்ளச்சாராய மரணம் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது” : விஜய் கண்டனம்!
கள்ளச்சாராய மரணம்… முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை!