பெண்களின் வாழ்வை மாற்றிய விடியல் பயணம்! போக்குவரத்துத் துறையின் பொற்காலம்!

தமிழகம்

நாட்டின் உட்கட்டமைப்புக்கு உயிர் நாடியாக இருப்பவை சாலைகளும், பொதுப் போக்குவரத்தும்தான்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சாலை மேம்பாடும், பொதுப் போக்குவரத்து மேம்பாடும் இன்று இந்தியாவில் தமிழ்நாடு உயர்ந்த பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கான முக்கிய காரணங்கள்.

மாநகரம், நகரம், புறநகரம், கிராமங்கள், மலை கிராமங்கள் என்று எங்கும் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், மினி பேருந்துகள் என்று போக்குவரத்துத் துறையால் இணைக்கப்பட்டுள்ளது.

The dawn trip that changed the lives of women! The Golden Age of Transport!

நமது மாநிலத்துக்குள் மட்டுமல்ல… அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலான போக்குவரத்துத் துறையில் 2024-25 ஆம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு 2166 BS-VI டீசல் பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் இதில் அடக்கம்.

போக்குவரத்துத் துறை சேவை நோக்கத்தில் ஈடுபட்டுள்ளதாலும் சிக்கன நடவடிக்கை அவசியம் என்பதாலும் புதிய பேருந்துகள் மட்டுமல்ல… பழைய பேருந்துகளை புதுப்பித்தல் பணிகளும் நடைபெற்றுள்ளன.

சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தினை (Multi Model Integration) உறுதி செய்யும் வகையில், மெட்ரோ இரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள மாநகர் போக்குவரத்துக் கழக இணைப்பு சிற்றுந்துகள், சென்னையில் 30 மெட்ரோ இரயில் நிலையங்களை இணைத்து 56 சிற்றுந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

The dawn trip that changed the lives of women! The Golden Age of Transport!

பேருந்து வருகை மற்றும் புறப்பாடு தடத்தில் வரும் இடம் அறிந்து கொள்ள ஏதுவாக, சென்னை பேருந்துச் (Chennai Bus App) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Iphone பயணிகளுக்கான (Chennai Bus App) செயலியின் IOS Version (Apple Mobile) 22.02.2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் புவிசார் தானியங்கி அறிவிப்பான் மூலம் (GPS) பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி தொழில் நுட்பங்களையும், நவீனங்களையும் கைக்கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒவ்வொரு நாளும் மக்கள் சேவையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பேருந்தின் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், பெண்களின் வாழ்வில் தன்னம்பிக்கையையும், சுயசார்பினையும் ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருப்பது ‘விடியல் மகளிர் பயண’ திட்டம்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றுதான் விடியல் மகளிர் பயண திட்டம். 2021 மே 7 ஆம் தேதி முதலமைச்சரால் கையெழுத்திடப்பட்டு அன்றே அரசாணையும் வெளியிடப்பட்டு, மே 8 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மகளிர் இலவச பேருந்து பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட திட்டங்கள் தேவையா என்று சில ‘மேதாவி’ குரல்கள் எழுந்தன.

The dawn trip that changed the lives of women! The Golden Age of Transport!

ஆனால், இது வெறும் பேருந்துப் பயணத்துக்கான ‘இலவசம்’ அல்ல… தமிழ்நாட்டில் சுயசார்பை நோக்கி முன்னேறத் துடிக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கைப் பயணத்துக்கான ‘இலவசம்!’

2021 மே 8 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கான கோடி விடியல் பயணங்கள் மகளிரால் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ‘பிங்க்’ வண்ணம் பூசிய பேருந்துகளைக் கண்டாலே ஸ்டாலின் பஸ் என்று முகமும் மனமும் மலர பெண்கள் அழைக்கிறார்கள்.

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு இன்றியமையாதது. தற்போது மாறி வரும் தமிழகத்தின் கல்வி, பொருளாதார, சமூக சூழல்களில் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் பெண்கள் வீட்டை விட்டு கல்விக்காகவோ, குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு பணிக்கு செல்வதற்காகவோ வெளியே செல்வது அவசியமாகியிருக்கிறது.

பொருளாதாரத் தேவைக்காகவும், கல்விக்காகவும் வெளியே பயணிக்க வரும் பெண்களுக்கு அதற்குரிய பாதுகாப்பு மற்றும் ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அந்த கடமையைதான் ஸ்டாலின் தலைமையிலான அரசின் போக்குவரத்துத் துறை செய்து வருகிறது.

கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும், கிராமங்களில் இருந்து சிறு நகரங்களுக்கு செல்லும் பெண்களுக்கும், மாநகரங்களில் சிறு சிறு தொழில்களை செய்யும் பெண்களுக்கும் இந்த விடியல் பயணம் வரப் பிரசாதம்.

இதனால் ஒவ்வொரு பெண்ணும் தனது மாதாந்திர பொருளாதாரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை மிச்சம் பிடிக்கிறார். அந்த ஆயிரம் ரூபாயை குடும்பத்துக்கு பயனுள்ள மற்ற வகையில் செலவு செய்கிறார்.

The dawn trip that changed the lives of women! The Golden Age of Transport!

பொருளாதார அடிப்படையில் மட்டுமல்ல… வீட்டை விட்டு பெண்களை வெளியே போகக் கூடாது என்று சொல்லிவந்த பழைய நிலைமை கொஞ்சம் மாறி, ஊரை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டை விதித்தது.

ஆனால் அதையும் மாற்றி, ‘ஃப்ரீ பஸ் தானே… போயிட்டு வரலாமே…’ என்று ஆணாதிக்க சமூகத்துக்குள்ளும் பெண்ணுரிமைச் சிந்தனையை விதைத்து அதன் மூலம் பெண்களின் வெளியுலக புழக்கத்தை அதிகரித்து பெரும் சமுதாய மாற்றத்துக்கு முடுக்குப் புள்ளியாக இருக்கிறது ஸ்டாலின் பஸ் திட்டம்!

இந்தத் திட்டத்தை போக்குவரத்துத் துறையில் சிறப்பாக செயல்படுத்தி வரும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கடந்த மார்ச் மாதம், “தமிழக அரசின் மகளிருக்கான விடியல் திட்டத்தின் கீழ் தற்போது வரை 440 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மாநில திட்டக்குழு ஆய்வு அறிக்கையின்படி சராசரியாக ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் மிச்சமாகிறது” என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் பஸ்ஸால் தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களால் தமிழ்நாடும் முன்னேற்றத் திசையில் தொடர்ந்து பயணிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தோனிக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டமா? மிரண்டு போன லக்னோ கோச்!

போக்குவரத்து Vs போலீஸ் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? எடப்பாடி காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *