The daughter carried her mother because there was no stethoscope... The health department sent a memo!

ஸ்ட்ரெச்சர் இல்லாததால் தாயை சுமந்து சென்ற மகள்… மெமோ அனுப்பிய சுகாதாரத்துறை!

தமிழகம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் தனது 80 வயது தாயை, மகள் சுமந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இருவருக்கு சுகாதாரத்துறை சார்பில் இன்று (மே 28) மெமோ அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் சொர்ணா (வயது 80). இவர் சாலையோரம் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் இவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மூதாட்டி சொர்ணாவை முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், அவரை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து, மூதாட்டியை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியை கேட்டபோது, மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பதிலேதும் கூறாமல் அவர்களை அலைக்கழித்துள்ளனர்.

பின்னர், வலியால் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த மூதாட்டியை, அவரது மகள் வளர்மதியே தனியாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு தூக்கி சென்றார். இதுத் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா விசாரணை நடத்தி வருகிறார்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாத விவகாரத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா ஆகிய இருவருக்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா மெமோ அளித்துள்ளார்.

மேலும், இதுத் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தப்படும் எனவும் அம்பிகா தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

கோவை: கையில் பாம்புடன் போஸ்… வனத்துறை ஆக்‌ஷன்!

முல்லைப்பெரியாறில் புதிய அணை: மதுரையில் விவசாயிகள் போராட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *