நிலத்துக்கு உரிய இழப்பீடு: ஆட்சியர் அலுவலகங்களில் தொடரும் ஜப்தி நடவடிக்கை!

தமிழகம்

நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருள்களை இன்று (டிசம்பர் 22) ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1985ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு சுமார் 55 நபர்களிடமிருந்து 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகக் கூறி, உரிமையாளர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் ஜப்தி

இதுதொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நடைபெற்றது. அந்த வழக்குகளில் நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வீதம், 1985 முதல் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்காததை அடுத்து, நிலம் வழங்கியவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் 3 கார்கள் மற்றும் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜப்தி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர்.

நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இம்மாத இறுதிக்குள் நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்திவிடுவதாக உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகம் ஜப்தி

the collectors office was confiscated

இதேபோல், ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக 8 பேரிடம் 1986ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அவர்களுக்கும், அரசுத் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட தொகை குறைவாக இருந்ததையடுத்து, கூடுதல் தொகை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இறுதியாய் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அசலும் வட்டியுடன், 78,73,635 ரூபாயை வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை வழங்க மறுப்பு தெரிவித்து, அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ’சென்னை உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பு செல்லும் எனக் கூறி அரசுத் தரப்பில் தொடரப்பட்ட அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகை வழங்காததால், முதலாம் கூடுதல் சார்பு நீதிமன்றம், ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த நவம்பர் 4ஆம் தேதி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜப்தி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அவர்கள், அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

28 ஆண்டுகளுக்கு பிறகு மனநல மருத்துவமனைக்கு சென்ற முதல்வர்!

”தோனி எப்பவுமே மாஸ் தான்” புகழ்ந்து தள்ளிய சச்சின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *