திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை மருத்துவ கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 22) திறந்து வைத்தார்.
அருணை மருத்துவ கல்லூரியை திறந்து வைப்பதற்காகவும், அதைதொடர்ந்து நடைபெறும் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு திருவண்ணாமலை சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.
மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 22) பிற்பகல், அருணை மருத்துவ கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் மருத்துவமனையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தென்மாத்தூர் வேலு நகரில் அமைந்துள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கலைஞர் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதைத்தொடர்ந்து புதிய மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் மருத்துவமனையின் துணை தலைவர் எ.வ.குமரன், மருத்துவ இயக்குநர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் கலந்துகொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
பிரியா
தலைவர் 170 : ரஜினி – அமிதாப் காட்சிகள் மும்பையில் ஷூட்டிங்!
எம்.ஜி.ஆர் கெட்டப்பில் நடிகர் கார்த்தி
மழை அப்டேட் ; இன்று எங்கெங்கு மழை?
நியூ சிலாந்துக்கு எதிரான போட்டி… இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்!