கோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் துரித நடவடிக்கை காரணமாக சுமார் 30 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து கோவை சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை கோவை அருகே வந்த நிலையில் பயணிகள் சிலர் ஆங்காங்கே தங்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.
தொடர்ந்து சுமார் 30 பயணிகளுடன் கோவை மாவட்டம் பீளமேடு அருகே வந்தபோது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வரை தொடங்கியது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் தாஸ், பேருந்தை உடனடியாக சாலையின் நடுவே நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினார்.
அவரது இந்த சாமர்த்தியத்தால், பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்ட நிலையில், தீ மளமளவெள பேருந்து முழுவதும் பரவி முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஒருவழியாக முடிந்த அஜித்தின் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு : வீடியோ வைரல்!
அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடன் விலகல்… கமலா ஹாரிஸுக்கு சிக்கல்!