குளு குளு குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி! – மக்களே ரெடியா?

Published On:

| By indhu

குற்றாலம் ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் தண்ணீர் நிரம்பியதையடுத்து படகு சவாரி தொடங்கி உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள படகு குலாமில் இருநபர் மிதி படகு, நான்கு நபர் மிதிபடகு என மொத்தம் 31 படகுகள் உள்ளன.

முன்னதாக, மே 15ஆம் தேதி முதல் அருவிகளில் தண்ணீர் விழுந்த போதும் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக படகு குழாம் நிரம்பியுள்ளது.

இந்த ஆண்டு சீசனுக்கான படகு சவாரியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (ஜூலை 6) தொடங்கி வைத்தனர்.

கடந்தாண்டை போலவே அரை மணி நேர சவாரிக்கு 2 இருக்கை படகுகளுக்கு ரூ.150, 4 இருக்கை படகுகளுக்கு ரூ.200, 4 இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.250, ஹயாக் வகை படகுகளுக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றாலத்தில் கடந்த வருடம் சாரல் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் அதனை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IND vs ZIM: முதல் வெற்றி… இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜிம்பாப்வே!

’குறுகிய இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை புதைக்க முடியாது’ : ஹத்ராஸ் சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel