The baby elephant fell into the well - the forest department rescued after 11 hours of struggle!

கிணற்றில் விழுந்த குட்டி யானை:11 மணி நேரம்… போராடி மீட்ட வனத்துறை!

தமிழகம்

நீலகிரியில் 30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானையை 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று (மே 29) வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று (மே 28) நள்ளிரவில் யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று தவறி 30 அடி கிணற்றுக்குள் விழுந்தது.

சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து, இன்று காலை முதல் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், அது கைகொடுக்காததால், இரண்டாவதாக இன்னொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு கிணற்றை சுற்றி இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதனிடையே, தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்கானித்தனர்.

இந்நிலையில், 30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. தொடர்ந்து, அதன் தாய் யானையுடன் அது வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடியின் பயோபிக் மணிவண்ணன் எடுத்தால் நன்றாக இருக்கும் – சத்யராஜ் நச் கமெண்ட்!

மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி: ஆளுநரை சாடும் டி.கே.எஸ்.இளங்கோவன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *