கிச்சன் கீர்த்தனா – ஆலு பாவை

தமிழகம்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கடையாக தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட பாம்பே ஸ்வீட்ஸில் பலரால் விரும்பி வாங்கப்படும் கார வகை இந்த ஆலு பாவை. இதை நீங்களும் சுவைத்து மகிழ இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

மைதா – 400 கிராம்
வனஸ்பதி – 100 கிராம்
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – 5 கிராம்
மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – 5 கிராம்
ஓமம் – 40 கிராம்
எண்ணெய் – ஒரு லிட்டர்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

மைதாவில், தண்ணீர், உப்பு மற்றும் வனஸ்பதி சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, அப்பளம் போலத் தட்டிக் கொள்ளவும்.

ஒவ்வொரு அப்பளத்தையும் நீளவாக்கில் மூன்று மூன்று துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து எதிரெதிர் திசையில் திருகி (படத்தில் காட்டியிருப்பது போல) ஓர் அமைப்பு உருவாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் அந்தத் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த துண்டுகளுடன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மாங்காய்த்தூள், கருப்பு உப்புச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தால், காரமான ஆலு பாவை தயார்.

ஸ்பெஷல் நெய் அசோகா

கிச்சன் கீர்த்தனா : இட்லி மாவு போண்டா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *